Pudukkottai: ஆண் குழந்தை மூச்சு திணறி பலி!

Advertisements

வீட்டை சுத்தப்படுத்துவதற்காக வைத்திருந்த சோப்பு தண்ணீர் கொட்டியதில் பிறந்து 22 நாட்கள் ஆன ஆண் குழந்தை மூச்சி திணறி பரிதாபமாக இறந்தது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ்(வயது 23). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்பு கமலேசுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கமலேஷ் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீர் வைத்திருந்தார். அந்த தண்ணீரை எதிர்பாராதவிதமாக கமலேசின் 2 வயது குழந்தை தடிவிட்டான். இந்த தண்ணீர் 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் மீது கொட்டியது. இதில் அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனே குழந்தையை அருகில் உள்ள அஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுபற்றி மண்டையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *