ஆலங்குடியில் உள்ள நாமபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நகரில் உள்ள நாமபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, குருபகவானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாகக், குரு தட்சிணாமூர்த்திக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, சிறப்பு சங்கல்ப அர்ச்சனை செய்யப்பட்டு, பட்டு உடுத்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.


