Kanimozhi Karunanidhi: பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்!

Advertisements

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கரூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் நடந்துள்ளது.மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *