
புதுச்சேரி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பதிலாகப் புதிய அமைச்சராகக் காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த காரைக்காலைச்சேர்ந்த சந்திரப்பிரியங்காவை அப்பதவியிலிருந்து முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு நீக்கினர். மேலும் அவர் வகித்து வந்த போக்குவரத்து த்துறை உள்ளிட்ட துறைகள் முதலமைச்சரே கூடுதலாகக் கவனித்து வந்த நிலையில் காலியாக இருந்த அமைச்சர் பதவியை நிரப்ப முடிவு செய்யப்பட்டு அதற்காகக் காரைக்கால் வடக்குத் தொகுதியை ச்சேர்ந்த திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழஙக முதலமைச்சர் ரங்கசாமி குடியரசு தலைவருக்குப் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்று புதிய அமைச்சராகத் திருமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு புதிய அமைச்சராகத் திருமுருகனுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமுரு

