
புதுச்சேரி, அசாம், கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும், கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அசாமில் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சர்வானந்த சோனாவால் திப்ரூகரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். கேரளத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேவன் இராமச்சந்திரன் கொச்சியில் குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவு செய்தார்.கேரளத்தின் கண்ணூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மைய வாக்குச்சாவடியில் காங்கிரசின் சாமா முகமது வாக்களித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.
நடிகர் மம்மூட்டியும் அவர் மனைவி சல்பத்தும் கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் ஆலப்புழையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வின விஸ்வம் திருவனந்தபுரத்தில் வாக்களித்தார்…




