Puducherry budget:வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு.. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு !

Advertisements

வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு.. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு !

புதுச்சேரி சட்டப்பேரவையில் 11–ஆம் நாள் அமர்வில் கேள்வி நேரம் முடிந்த பூஜ்ஜிய நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, துணைத் தலைவர் ஏ.எச்.எம். நாஜிம் ஆகியோர் மத்திய அரசு கொண்டுவரவுள்ள வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதே நிலைப்பாட்டைப் புதுச்சேரி அரசும் எடுத்து, புதுச்சேரி சட்டபேரவையில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார்கள். அதற்கு, முதலமைச்சர் ரங்கசாமி இந்தச் சட்ட மசோதா குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். முதல்வரின் இந்த நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக உறுப்பினர்கள் ஏ.எச்.எம். நாஜிம், வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாகதியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மு. வைத்தியநாதன் மற்றும் சுயேட்சை உறுப்பினர் பி.ஆர். சிவா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *