வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி, மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பல அரசியல் கட்சிகள் அவர்களின் எதிர்ப்பையும் , பாஜக வை சேர்ந்த கட்சியினர் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *