
‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் ரசிகர்களை, தன்னுடைய கண் அழகால் கட்டிப்போட்ட, பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது கவர்ச்சி ததும்பும், புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில், டீன் ஏஜ் பள்ளி மாணவ – மாணவிகளின் காதல், விளையாட்டு, சண்டை, எமோஷன்ஸ், போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே… இப்படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா வாரியர், அவரின் பாய் பிரெண்டை பார்த்துக் கண்ணாடிக்கும் காட்சி ஒன்று வெளியாகி ஒரே நாளில். இவரைப் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

பிரியா வாரியரின் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பால், இவரின் காட்சிகள் இப்படத்தில் அதிகமாக்கப்பட்டது. இதற்காகக் கதைக்களத்தில், மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் விளைவாகவே இப்படம் படு தோல்வியைச் சந்தித்ததாக, இப்படத்தில் நடித்த மற்றொரு நடிகை, கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தைப் பயன்படுத்தி கொண்ட, பிரியா வாரியர்… அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஆரம்பத்தில் தெலுங்கு, மலையாளம் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திய பிரியா வாரியர் தற்போது ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் கன்னடத்திலும் விஷ்ணு ப்ரியா என்கிற படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

திரைப்படங்கள் நடிப்பதை தாண்டி, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியா வாரியர் தற்போது… கேரள புடவையில்… வகுடில் குங்குமம் வைத்துக் கொண்டு தண்ணீரில் நின்றபடி உச்சம் தொடும் கவர்ச்சியில் எடுக்கப்பட்ட சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் போட்டோஸ்… தாறுமாறாகப் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.


