பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

புதுடெல்லி:

கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *