Kumbhabhishekham: பிரசித்தி பெற்ற அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

108 திவ்ய தேசங்களில் 75 வது திவ்ய தேசமான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 75 வது திருக்கோயிலாகவும் இக்கோயில் மூலவர் 8 திருக்கரங்களை உடையவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கும் உரியதாகவும் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் திகழ்கிறது. இக்கோயில் கடந்த 9.12.2021  ஆம் ஆண்டு  கும்பாபிஷேகம் செய்வதற்காகப் பாலாலயம் செய்யப்பட்டு ஆலயம் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடர்பான யாகசாலை பூஜைகள் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் 108 கலச சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *