
இன்ஸ்டாகிராமில் Content Creator ஆக இருந்த இளம்பெண் ஒருவர், தனது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறப்பிற்கான காரணமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமூக ஊடகத்தில் செல்வாக்கு மிகுந்த Content Creatorம், மிஷா அகர்வால் என்ற அழகு சாதன பிராண்டின் நிறுவனருமான மிஷா அகர்வால், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.ஏப்ரல் 25 ஆம் தேதி அவரது பிறந்தாள் வரவிருந்த சூழலில், இப்படி ஒரு விபரீத முடிவை அவர் எடுத்திருப்பது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்தநிலையில், மிஷா இறந்த ஆறு நாட்களுக்கு பிறகு, மிஷாவின் சமூக வலைதளப்பக்கத்தில் இறப்பிற்கான காரணத்தை கண்ணீர் நிறைந்த வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார் அவரது சகோதரி.
அதில், “ மிஷாவின் செல்போன் வால்பேப்பர் எல்லாவற்றையும் சொல்லிவிடும் அவளின் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று. 1 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற வேண்டும் என்பதே மிஷாவின் கனவு. அவர் இறப்பதற்கும் முன் 3.5 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
தன்னை பயனற்றவராக உணர ஆரம்பித்தாள். ஏப்ரல் மாதம் முழுவதும் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டாள். என்னை அடிக்கடி கட்டிப்பிடித்து அழுது, ‘ஜிஜா, என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால் நான் என்ன செய்வேன்? என் வாழ்க்கையே முடிந்துவிடும். “ என்றாள். எவ்வளவோ அவளை சமாதானப்படுத்த முயன்றோம். இன்ஸ்டாகிராம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே..அதுதான் எல்லாமே என்று நினைக்காதே என்றெல்லாம் கூறினோம்.
300-க்கும் மேற்பட்ட ரீல்ஸை அவர் பதிவிட்டிருந்தாலும் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7,923-ஆக மட்டுமே இருந்துள்ளது. ஆனால், இவரைவிட மற்றவர்களுக்கு பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இவருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீண்ட நாள்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர், ஏப். 1 அன்று விஷம் அருந்தி கிராமத்தின் கிரிக்கெட் மைதானத்தில் விழுந்தார்.




