காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் : நால்வா் உயிரிழப்பு..!

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியத் தாக்குதலில் நான்குப் பேர் உயிரிழந்தனர்.

 வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களின் இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்தனா்.
இத்தாக்குதலில் ஆயுதக் குழுவைச் சோ்ந்த முவாமன் அகமது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரின் குடும்பத்தினா் உயிரிழப்பு குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
மேலும், இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பு எல்லா ஆயுதங்களையும் விடுத்து சரணடையும் வரை போரில் இருந்து பின்வாங்க போவதில்லை எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *