திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் திரவுபதி முர்மு சாமி தரிசனம்..!

ஜனாதிபதி திரவுபதி முர்மு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

இதை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை மந்திரி ராம நாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வரர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

இதன் பின்னர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

இதனிடையே ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் காவல்துறைனர் சார்பில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *