
2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் பாரப்பத்தி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி தலைவர் விஜய் மாநாடு, பொதுக்குழு, செயற்குழு பல்வேறு கூட்டங்களை நடத்தி இருக்கிறார்.
இந்த மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பணிகளை தவெகவினர் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட மாநாடு அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மேலும் சிசிடிவி கேமராக்கள் , கழிவறை வசதிகள் , குடிநீர் வசதிகள் , 5000 அடி நீளத்தில் விஜய் மாநாட்டில் பேசுவதற்காக மேடை , மேலும் கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் என ஏராளனமான திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் அவர் மாநாடு மேடையில் என்ன பேசுவார் என்பதை அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தவெகவின் மாநாடு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. தவெக சார்பில் நடந்த மாநாடு, பொதுக்குழுவில் கூட்டங்களில் விஜய் மத்திய மற்றும் மாநில அரசை தாக்கி பேசி வருகிறார். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து வெளிப்படையாக எங்கு தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
எனவே, 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் விஜய் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேச்சுவார் எனவும் கூறப்படுகிறது.

