Nipah Virus Vaccine: தடுப்பூசி தயாரிக்கும் பணிதொடங்கம்!

Advertisements

நிபா வைரஸ் எதிர்ப்புத் தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், இருவர் உயிரிழந்தனர்.நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வௌவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் உடல் திரவங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் பரவும் இந்த வைரஸ் மூளையைச் சேதப்படுத்துகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு முதலில கேரளாவில் கண்டறியப்பட்டது.

இதனிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கேரள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் சிகிச்சைக்காக மேலும் 20 டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று அறிவித்தது.இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கப்படும் மருந்து, நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்பட வேண்டும்.” அவரைப் பொறுத்தவரை, இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த மருந்து செலுத்தப்படவில்லை.
நிபாவால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 2-3 சதவீதமாக இருக்கிறது. கோவிட் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது (40 முதல் 70 சதவீதம் வரை) மிகக் குறைவாக உள்ளது.. வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *