Mari Selvaraj: சமத்துவ பொங்கல் நடைபெற்றால் மகிழ்ச்சி!

சென்னை அயப்பாக்கத்தில் நடைபெற்றது போல் தமிழ்நாடு முழுவதும் சமத்துவ பொங்கல் நடைபெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் சமத்துவப் பொங்கல் விழா அயப்பாக்கம் அறிஞர் அண்ணா பூங்காவில் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் துரைவீரமணி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு 1500 புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.  சமத்துவப் பொங்கல் விழாவை முன்னிட்டு விழா நடைபெற்ற அறிஞர் அண்ணா பூங்கா  ஒரு லட்சம் கரும்பு,  ஆயிரம் வாழை மரம், மஞ்சல் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதில் புதுப்பானையில் பொங்கலிட்ட பெண்கள் பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் பொங்கலோ பொங்கல் எனக் குலவையிட்டு  உற்சாகமாகக் கொண்டாடினர்.இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ், திமுக எம்.பி,டி.ஆர்பாலு,எம்.எல.ஏகாரம்பாக்கம் கணபதி ஆகியோர்பங்கேற்று விழாவைத்துவக்கிவைத்தனர்.

அதேபோல் பூங்காவின் நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட 2 யானை சிலைகளைத் திறக்கப்பட்டது. 5 ஆயிரம் பெண்கள் ஒரே நேரத்தில் 1500 பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடியது நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இதற்கான சான்றுகளும் விழா மேடையில் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய மாரி செல்வராஜ்ஆயிரத்தில் ஒரு ஊர் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தாலே அங்கே ஒரு சண்டை இருக்கும் அங்கே 5000 பேர் ஒன்று சேர்ந்து அமைதியாகப் பொங்கல் வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இது போன்றிருக்கும் சமத்துவ பொங்கல் நடைபெற்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இதற்கு முன்னின்று ஏற்பாடு செய்து கொடுத்த அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் தலைவர்  வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *