உள்ளூரிலே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர் – கே.என்.நேரு!

Advertisements

திருச்சி:

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் கட்சியின் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் உரையில் கூறியதாவது:

த.வெ.க. கட்சியின் 2-வது ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய், பிரசாந்த் கிஷோருடன் மேடையில் கலந்து கொண்டுள்ளார். பிரசாந்த் கிஷோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றியபிறகு தற்போது மாற்று கட்சியில் உள்ளார்.

யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு அதில் கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே மதிப்பில்லாதவர்.

அவர் தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் இதையே உறுதிப்படுத்துகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *