
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த கன்னட யூடியூப் சேனல் உரிமையாளர் விக்ரமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரகாஷ் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சனாதனதர்மத்திற்கு எதிரான தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்குப் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக விக்ரமன் தனது யூடியூப் சேனலில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி தன்னையும் அவரது குடும்பத்தினரையும் மோசமாகச் சித்தரித்து மிரட்டல் விடுத்து வருவதாகப் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். சுமார் 90,000 பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.


