woman doctor murder:உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும்!

Advertisements

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலத்தில் ஓரு மாதத்துக்கும் மேலாக டாக்டர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் மத்திய-மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறி, அது குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்ற மாநில அரசின் உறுதியையும் கபில்சிபல் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இளநிலை டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேநேரம் தங்கள் பாதுகாப்பு தொடர்பான டாக்டர்களின் கவலைகளை போக்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார கல்வி இயக்குனர் (டிஹெச்இ) பதவி விலக கோரி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், இன்று மதியம் சுகாதாரத்துறையின் தலைமையகமான ‘ஸ்வஸ்த்ய பவனுக்கு’ பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தையும் ‘நிறுத்தப் பணியையும்’ தொடர்வோம். சுகாதார செயலாளரும், சுகாதார கல்வி இயக்குனரும் ராஜினாமா செய்ய விரும்புகிறோம். நாளை மதியம் ஸ்வஸ்தியாவுக்கு பேரணி நடத்துவோம். பவன்,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *