
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பி.ஆர்.கவாய் பதவி ஏற்றுக் கொண்டார். இதனை ஒட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவர் என்று கூறினார்.
ஹகொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விரிவுரைகளை வழங்கியுள்ளார்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த, அரசியல் சாசன அமர்வுக்கும் பி.ஆர்.கவாய் தலைமை தாங்கினார்.
அவர் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.


