தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்ப்பு..!

Advertisements

உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார்.

இதை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரேசில், பூடான், கென்யா, மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து டெல்லியில் நீதிபதி சூர்யகாந்த் பேசியபோது, தனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ள நிலையில் இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *