
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
முக்கியமாக… மூன்றாவது மொழி தேவையில்லையெனக் கூறும் விவாதக்காரர்கள்… அரசியல்வாதிகள் மட்டுமல்ல… சில கல்வியாளர்களும் உள்ளனர். அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு… அவர்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லாமல்… இரண்டு மொழிகளை வழங்குவது ஒரு பெரிய சேவியாகும். வீட்டில்… அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தகுதியான பெற்றோர்கள் இல்லை என்பதால்… tuition போன்ற உதவிகளைப் பெற முடியாததால்… இதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்க வேண்டும் என வாதிக்கிறார்கள்.
இதனால் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு… இப்போது சொல்லிக் கொடுக்கப்படுவது… ஒரு சாதனை போலவே உள்ளது. அதற்கு மேலாக அவர்கள் ஆசைப்பட கூடாது… என்ற கருத்தில் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சமச்சீர் கல்வியை வழங்குவதாக… வசதி. அதனால், தெலுங்கானா ஆளுநராக இருந்தபோது, அருகில் உள்ள அரசாங்க ராஜ்பவன் பள்ளிக்கு நான் அடிக்கடி சென்று இருந்தேன். ஆளுநரின் பொது நிதியிலிருந்து அந்தப் பள்ளியின் மேம்பாட்டிற்காகக் கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்களை வழங்கினேன். அந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், அன்றாட வேலை செய்பவர்களின் குழந்தைகள் என்பதால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் வணங்கும் சத்ய சாய் பாபாவின் அறக்கட்டளைமூலம் காலை உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்தேன். இது அங்கு மிகுந்த வரவேற்பை பெற்றது, மேலும் அந்த அரசாங்க பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தபோது, அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும்போது, அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மத்திய அரசின் கல்வி திட்டத்தில் பங்கேற்று, அரசாங்க பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்துள்ளோம். ஒரு பள்ளி கட்டிட வசதிக்காக அரை நாள் பள்ளி என்ற அறிவிப்பை எதிர்த்து, முழு நேர பள்ளிக்காகப் போராடிய அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இந்தக் குழந்தைகளின் வாய்ப்புகளைப் பறிக்காதீர்கள்… அவர்களும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.
மன வேதனை அடைகிறேன்…. மும்மொழி கொள்கையை பற்றி.. கேட்டு வரும் விவாதங்களில் சில கருத்துக்கள் என்னை கவலை அடையச் செய்கின்றது.. பிரதானமாக.. மூன்றாவது மொழி வேண்டாம் என்று. விவாதிப்பவர்கள்.. அரசியல்வாதி மட்டுமல்ல.. சில கல்வியாளர்கள் என்று சொல்பவர்கள் கூட.. அரசாங்கப் பள்ளியில்…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) February 20, 2025
