தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு பெறுகிறது..!

Advertisements

தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான, 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்’ காலம் ஆகும். அந்த வகையில் கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. இந்த ஆண்டு வெப்ப அலை தமிழ்நாட்டில் இருக்காது.

வெப்பத்தின் தாக்கமும் வழக்கத்தைவிட குறைந்தே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.

இதற்கிடையில் தென் மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழையும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில்  இன்றுடன் நிறைவு பெறுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *