Pope Francis:கமலா ஹாரிஸ், டிரம்பை விமர்சித்த போப் பிரான்சிஸ்!

Advertisements

ரோம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், டிரம்பை விமர்சித்த போப் பிரான்சிஸ், கத்தோலிக்கர்கள் குறைவான தீமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு தீமை தான்!
வாடிகன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 87, வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து மீண்டும் ரோம் திரும்பினார். அவரிடம், அமெரிக்கா தேர்தல்குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில்:

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் வாழ்க்கைக்கு எதிரானவர்கள். புலம்பெயர்ந்தோரை துரத்துகிறவராக இருந்தாலும் சரி, குழந்தைகளைக் கொல்பவராக இருந்தாலும் சரி இரண்டும் வாழ்க்கைக்கு எதிரானது.

கருக்கலைப்பு
அமெரிக்க கத்தோலிக்கர்கள் குறைவான தீமையைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டு தீமைகளில் குறைவானவர் யார்? அந்தப் பெண்மணி அல்லது ஜென்டில்மேன் எனக்குத் தெரியாது. அமெரிக்க கத்தோலிக்கர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து ஓட்டளிக்க செல்வதற்கு முன் அந்த முடிவை எடுக்க வேண்டும்.

ஓட்டளிக்காதது நல்லது அல்ல. கருக்கலைப்பு ஒரு மனிதனைக் கொல்கிறது. கருக்கலைப்புக்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது . இது ஒரு படுகொலை இந்த விஷயங்களைப் பற்றி நாம் தெளிவாகப் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *