G20 Summit 2023: உக்ரைன் – ரஷ்யா போர்குறித்து தீர்மானம்!

Advertisements

G20 Summit 2023

உக்ரைன் – ரஷ்யா போர்குறித்து தீர்மானம்! உறுப்பு நாடுகள் ஒப்புதல்…

புதுடில்லி: ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டறிக்கை வெளியிட ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ஜி-20 மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாகக் கூட்டறிக்கை வெளியிடப்படும். கூட்டறிக்கை வெளியாக உதவிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி.

நமது குழுக்களின் கடும் முயற்சியால் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. கூட்டறிக்கை வெளியிட ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது. ஜி20 மாநாட்டில் முக்கிய அம்சமாக உறுப்பு நாடுகளின் கூட்டறிக்கை பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *