
சூர்யா 44, தளபதி 69 என மீண்டும் தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டேவுக்கு பல படங்கள் கைவசம் உள்ள நிலையில், இலங்கையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
நடிகை பூஜா ஹெக்டே தனது 34வது பிறந்தநாளை நேற்று முன் தினம் இலங்கையில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் கவர்ச்சிகரமாகக் கொண்டாடிய போட்டோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட கேக் கட்டிங் நடைபெற்றது. சூர்யாவின் 44வது படத்தைத் தொடர்ந்து தளபதி 69 படத்திலும் இவர் தான் நாயகி.
பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை ரெசார்ட்டில் தம்மாத்துண்டு உடையில் ரசிகர்களுக்குக் கவர்ச்சி ட்ரீட் கொடுத்த புட்ட பொம்மா.

தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு அவருக்குச் சூப்பரான வருஷமாக மாறியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழில் அடுத்தடுத்து 2 பெரிய படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.
தளபதி விஜய்யுடன் பூஜா ஹெக்டேவை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் படம் மிஸ் ஆகிடுச்சு, இது மிஸ் ஆகாது எனக் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கவர்ச்சி உடையில் தனது கால் அழகை தாராளமாகக் காட்டி ரசிகர்களைக் கிறங்கடித்து
வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.

