
திமுக 1967இல் ஆட்சிக்கு வந்த நாள் முதல் களங்கம் இல்லாத ஓர் ஆட்சியைத் தந்ததே கிடையாது என்று கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கே என் நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் லட்சுமண பெருமாளின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், களங்கம் இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், வழக்கை நடத்துவதற்கு ஏதுவாகக் கே.என்.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 1967இல் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் களங்கம் இல்லாத ஓர் ஆட்சியை அவர்கள் தந்ததே கிடையாது என்றும், அதை இந்த ஆட்சியிலும் நிரூபிக்க முடியும் என்றும் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


