நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை..!

அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது என்றும் நிரந்தர நண்பரும் கிடையாது என்பது போல தான் பிரேமலதா விஜயகாந்த் முடிவு என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகே மகளிர் அணி மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கி.வீரமணி பேசியபோது, சுயமரியாதை திருமணம் இந்திய அளவில் சட்ட அளவில் வர வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது என்றும் நிரந்தர நண்பரும் கிடையாது என்பது போல தான் பிரேமலதா விஜயகாந்த் முடிவு என தெரிவித்தார். பெண்ணிற்குரிய மனித உரிமையை மறுக்கக்கூடாது என்றும் இதனை தடுக்க சிறப்பு சிறப்பான நீதிபதி தலைமையிலான ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *