Advertisements

நாலுமுனைப் போட்டி உள்ளதால் சுறுசுறுப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டு என்று நிர்வாகிகளுக்குத் திமுக துனை பொதுச்செயலாளர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்றறது. கூட்டத்தில், துணை பொதுச்செயலாளர் பொன்முடி பேசிய போது, சுவரில் சின்னத்தை ஆங்காங்கே வரைய வேண்டும். நாலுமுனைப் போட்டி உள்ளதால் சுறுசுறுப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் தொடங்கிவிட்டது என்ற உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில், மாவட்ட பொருப்பாளர் கெளதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisements




