Pongal Special Buses: பொங்கல் சிறப்புப் பேருந்து எங்கிருந்து கிளம்பும் தெரியுமா?

மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து 11,006 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும்.

இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள்குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும். தென்மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்க்பபடும். அதேபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம்,  கும்பகோணம், சேலம், கோவை, திருச்சி, வந்தவாசி, திண்டிவனம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய பேருந்துகள் இயங்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *