சீமான் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

Advertisements

தந்தை பெரியார்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கையாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சீமானின் வீட்டைச் சுற்றி 3 இடங்களில் தடுப்புகள் அமைத்துப் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் சீமான் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

முன்னதாக, தந்தை பெரியார்குறித்து நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு ஆதாரம் வேண்டும் என்று தெரிவித்துள்ள த.பெ.தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், இன்று காலைச் சீமான் வீட்டுக்குச் சென்று ஆதாரத்தைக் கேட்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில்,

தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தந்தை பெரியார்குறித்து தீய நோக்கத்தோடு அவதூறு குற்றச்சாட்டு கூறுவதாகவும், சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலை கழகம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *