இனிமேல் காவல்துறையின் அத்துமீறல்களை எல்லாம் பொறுத்து கொள்ளப்போவதில்லை.!

திமுக அரசு மதக் குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் எந்தவொரு தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மூலம் மதுரை ஆதீனத்தையும் தொந்தரவு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் காவல்துறையின் அத்துமீறல்களை எல்லாம் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மதுரை ஆதீனத்தின் பக்கப்பலமாக இருப்பார்கள் என்றும், தானும் மதுரைக்குச் செல்லவிருப்பதாகவும் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *