
சிரியாவில் போர் நிறுத்தம் அறிவித்த பின்னும் சுவேய்தா நகரில் பெடூயின்களுக்கும் டுரூஸ்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. சிரியாவின் தென்பகுதியில் உள்ள சுவேய்தா நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பெடூயின் இனத்தாருக்கும், டுரூஸ் இனத்தாருக்கும் இடையே நேர்ந்த மோதலில் தொள்ளாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மோதலை ஒடுக்க வந்த இராணுவத்தினரும் டுரூஸ் இனத்தவரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. டுரூஸ்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை இஸ்ரேல் அரசு கண்டித்ததுடன், அங்குப் படையெடுத்து வந்த சிரிய ராணுவத்தினர் மீதும் குண்டுவீசித் தாக்கியது.
இதையடுத்து இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுளள்ளது. இருப்பினும் சுவேய்தா நகரில் இரு பிரிவினரிடையே இன்னும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் ஆங்காங்கே மோதல் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
ஆயுதங்களுடன் சென்று கடைகளில் கொள்ளையடிப்பதாகவும், கடைகளுக்குத் தீவைத்துக் கொளுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



