பணம் கொடுக்காமல் பெற்ற வெற்றி….! மக்கள் அன்புதான் தவெக-வின் பலம்….!

 இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை என்று தவெக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற வெற்றி பெற்ற வேட்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் வைத்திருக்கும் அன்பும் ஆதரவும் தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார்.
ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் அவசியம். ஆனால், அண்ணா, புரட்சி தலைவர், அம்மா ஆகியோரின் தியாகத்தால் வளர்ந்த அதிமுக இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஒருவன் தான் தான் எல்லாம் என்று நினைத்தால், தெய்வம் யார் என்பதை காலம் காட்டிவிடும் என்று எதிர்கட்சியை மறைமுகமாக விமர்சித்தார்.
தெய்வத்தின் அருளால் இன்று தலைவர் ஆட்சிக்கட்டிலில் அமர உள்ளார் என்று தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *