சட்டவிரோத குடியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்..!

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவு கட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம், குவாஹாட்டியில் 5 கோடியே 500 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதையடுத்து, அவர் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் தேசப் பிரிவினைக்குக் காரணமாக இருக்கும் எம்எம்சி எனும் மாவோயிஸ்ட்- முஸ்லிம் லீக் கலந்த காங்கிரசிடம் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நாட்டின் பாதுகாப்புக்குக் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும், வெற்றுப் பேச்சுகளுடன், ஆயுதக் கொள்முதலில் ஊழல்தான் செய்கிறது என்றும் கூறினார். மேலும், நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவு கட்டப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *