புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.. திருமாவிடம் மன்னிப்புக் கேட்ட வைகோ.!  

அந்த வார்த்தையைத் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்
புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை
திருமாவளவனிடம் மன்னிப்புக் கேட்ட வைகோ
அப்படி என்ன பேசினார் வைகோ விரிவாகப் பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்….
இரண்டு தினங்களுக்கு முன்பு  தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.  அப்போது அவர் என்ன பேசுனாருனா,  முதலமைச்சர் விஜய் கரூர் போகக் கூடாது  பேசக் கூடாதுனு உச்சநீதிமன்றத்திற்கு திமுக சென்றது.
ஆனால் கோர்ட் சாட்டையடி கொடுத்துள்ளதுனு பேசினாரு. அதுமட்டுமல்லாமல், தவெக கூட்டணியில் இருந்தாலும் திமுகவுடன் கூட்டணியிலும் நட்பிலும் தொடர்கிறோம் என திருமாவளவன் கூறியதற்கு அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும்னு திருமாவளவனை விமர்சனம் பண்ணியிருந்தாரு வைகோ.
அரியலூரில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்த போது வைகோவின் நோபல் பரிசு குறித்து கேள்வி எழுப்பியபோது, “வைகோ அவர்கள் எனக்கு நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்ததற்கு நன்றி. பரிசு கிடைத்தாலும் அவருக்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில மீண்டும் நேற்று மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய வைகோ, திருமாவளவனுக்கு நோபல் பரிசு என கூறியது அவரது மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்,  திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் அப்படினு பேசினாரு.
தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவன் மீது எனக்கு கொஞ்சம் கூட கோபமோ, மன கசப்போ இல்லை. அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன்.திருமாவளவன் பற்றிய நான் அப்படி பேசியதால விசிக எம்பி ரவிக்குமார் எனது சங்கொலி பத்திரிகை நிகழ்ச்சிக்கு வர முடியாது, டெல்லியில் வேலை இருக்குனு சொல்லிவிட்டார்.
திமுகவும் தவெகவும் ஓரணியில் சேர வேண்டும் என திருமாவளவன் தெரிவித்திருந்ததை கேட்டு எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வடதுருவமும் தென் துருவமும் இணைய முடியுமா? தவெக அமைச்சரவையில் இருந்து கொண்டு திமுகவுடன் நட்பா இது எப்படி சாத்தியமாகும்னு வைகோ கேள்வி எழுப்பியிருந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
வைகோவுடைய கேள்விக்கு பதில் சொல்லுவாரு திருமாவளவன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *