
டெல்லி ஆசாத்பூர் சந்தைக்குச் சென்ற ராகுல் காந்தி அங்குக் காய்கறி வியாபாரிகளிடம் உரையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது…
புதுடெல்லி: ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாத் 29-ந் தேதி டெல்லி ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்கப் பேசிய காய்கறி வியாபாரி ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்தார்.அதில் ராமேஷ்வர் என்ற காய்கறி வியாபாரி, “தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்னால் தக்காளி வாங்கி விற்பனை செய்ய இயலவில்லை. அப்படியே வாங்கினாலும் அதை என்ன விலையில் விற்பது என்பதும் தெரியவில்லை. சிலர் தக்காளிகளை இருப்பு வைத்துள்ளனர். மழையில் அது அழுகிப்போக வாய்ப்பு உள்ளது. அதனாலும் நஷ்டம் ஏற்படும்.
Rahul Gandhi | Azadpur Mandi | Delhi | Traders
பணவீக்கம் உயர்வால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒருநாளைக்கு ரூ.200 சம்பாதிப்பதே கடினமாக இருக்கிறது” என்று பேசியது பதிவாகி இருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆசாத்பூர் சந்தைக்கு நேரில் சென்றார்.அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பின்னர் காய்கறி விலை விலைவாசி நிலவரம்குறித்து தெரிந்து கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


