மீண்டும் ஈரானை தாக்க தயார் என்று நெதன்யாகு எச்சரிக்கை.!

அதிக பலத்துடன் மீண்டும் ஈரானை தாக்க தயார் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இஸ்ரேல் இதற்கு முன் நடத்திய இரண்டு இராணுவ நடவடிக்கைகளால் ஈரான் பலவீனமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், மோதல் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.

இஸ்ரேலிய விமானப்படையின் நீண்ட கரத்தால் ஏமன் முதல் ஈரான் வரை எங்கும் சென்றடைய முடியும் என்பதை தாங்கள் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்தப் போர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *