பழைய ஓய்வூதிய திட்டம் 100 சதவீதம் இல்லை..அரசு ஊழியர்கள் தலையில் பேரிடி.!

Advertisements

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் 100 சதவீதம் நடைமுறைக்கு வராது என்ற மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்று அறிவித்திருந்தார்கள். இதன் மீது நம்பிக்கை வைத்து அரசு ஊழியர்கள் அனைவரும் திமுகவை ஆதரித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் எப்படியும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

தற்பொழுது அந்த முடிவில் மிகப்பெரிய மின்னலும் இடியுமாக சேர்ந்து அதிர்ச்சி தரத்தக்க வகையில் இறுதிச் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் 100% செயல்படுத்த போவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் . இதில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஓய்வூதியதாரர்களும் இருக்கிறார்கள்.  இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.

ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தால் தங்களுக்கு மிகப்பெரிய பயன்கள் எதுவும் இல்லை எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது . ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை மாறாக அரசு ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சுகதீப் சிங் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஆலோசனை செய்து வருகிறது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு வழியாக இந்த ஆய்வறிக்கை மூலம் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடை முறைக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் எப்படியும் திமுக தரப்பில் அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.

இந்த நிலையில் இறுதிக் கட்டமாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து இருந்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார் . திமுக அரசு வாக்குறுதி கொடுத்தது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் அனிதா சுமந்த் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

விசாரணையின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கூடிய பொதுநல மனு குறித்து அரசு நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது , பழைய பென்ஷன் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த உத்தரவு அமைந்திருந்தது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவு குறித்து நமது ஜெம் தொலைக்காட்சி சிறப்பு செய்தியை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தங்களுடைய இறுதி முடிவை அரசு தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள் இதுதான் இப்பொழுது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பென்ஷன் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்து அக்டோபர் வரை ஓய்வு பெற்ற 54,000 பேரில் 51 ஆயிரம் பேருக்கு முழுமையான பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் அறிவித்ததன் மூலம் பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. ஒருவேளை சுகன் தீப் குழுவினர் அதன் அறிக்கையை தாக்கல் செய்தாலும் கூட பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்த போவதில்லை என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடாக இருப்பதாக தெரிகிறது.தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முன்வராததால் தற்பொழுது திமுக மீது ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதன் விளைவாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது. அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று திமுக அறிவிததுவிட்டு கடந்த தேர்தலில் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாக பார்க்கப்படுகிறது.எனவே தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் பத்து லட்சம் அரசு ஊழியர்களின் குடும்பத்து ஓட்டு இந்த முறை திமுகவுக்கு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது.

இது குறித்து மு க ஸ்டாலின் இதுபோன்ற முடிவை எப்படி எடுத்தார் என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவும் இருக்கிறது. பழைய ஓய்வூதிய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் அரசு ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 50 லட்சம் போட்டு ஓட்டு திமுகவுக்கு கிடைக்காது என்பது உறுதியான தகவலாகும். இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அடுத்த கட்டமாக என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *