PM Modi: சிங்கப்பூர் அதிபருக்கு வாழ்த்து!

Tharman Shanmugaratnam

சிங்கப்பூர் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்…

புதுடெல்லி: சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 70.4 % வாக்குகளைப்பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாகத் தேர்தல் துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து தர்மன் சண்முகரத்னத்துக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தியா-சிங்கப்பூர் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *