Accendent: கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு!

Advertisements

திருப்போரூர்: 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு ஓ.எம்.ஆர்., சாலையில், பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது 5 பெண்கள், அங்குச் சாலையைக் கடக்க முயன்றனர்.

அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்துகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *