Advertisements

நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி நாளைத் திறந்து வைக்கிறார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியிலிருந்து, காணொலி காட்சி வாயிலாக, நாளைத் திறந்து வைக்க உள்ளார். சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 12க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹே அம்ரித் பாரத் ரெயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும். ரயில் நிலையத்தைப் பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாகவும், முகப்புப்பகுதியை மேம்படுத்துவது, ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் என்று நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் புத்துருவாக்கப்பட்டுள்ளன.
Advertisements




