இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது – பிரதமர் பெருமிதம்.!

இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறியுள்ளார்.

டில்லியில், நடைபெற்ற ஆங்கில ஊடக மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதையடுத்து அவர், பேசிய போது அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், இந்தியாவை யாரும் தடுக்க முடியாது பல சவால்களில் இருந்து மீண்டுள்ளது என கூறினார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது.

மேலும், இந்தியாவில் இன்று உலகின் 50 சதவீத டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் நடக்கிறது. இதையடுத்து அவர், 2014 ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேருக்கு வங்கிக்கணக்கு இல்லை.

இதனால், வங்கி அமைப்பை சீரமைத்ததுடன் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *