
அமெரிக்கா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது பரப்பை உண்டாக்கியது.
விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர். விமானத்தில் மொத்தம் இருந்த 173 பயணிகள் இருந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இதில் அணைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர் என்று அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பராமரிப்பு குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில் பயணிகள் அவசரகால வழிகளில் இருந்து வெளியேறுவது மிக தெளிவாக தெரிகிறது. பயணிகளுக்கு மாற்று விமானம் மூலம் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.


