சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி..!

வரலாற்று சிறப்புமிக்க ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவுகூர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரலாற்று சிறப்புமிக்க ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார். அவர்களின் தைரியம் எப்போதும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்திஜியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் எழுப்பிய அந்த அறை கூவல், நமது சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலையளித்ததுடன், காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் தளராத உறுதியையும் பிரதிபலித்ததாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *