கர்நாடக அரசை காப்பாற்றக் கூட்டமா? – கனிமொழி அதிர்ச்சித் தகவல்.!

காவிரி பிரச்சனையில் கார்நாடக காங்கிரஸ் அரகைக் காப்பாற்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டுவரப்படப் போகிறது எனப் பரவலாகப் பேசப்படுகிறதே தவிர, இன்னும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால், இந்தச் சூழலில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர் என்றால், இந்த அரசை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இவர்கள் நடத்தியக் கூட்டம் தொடர்பாக முறையாகத் கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பி இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழக அரசின் தலைமைச் செயலர் தனித்தனியாகக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
இவர் தமிழ்நாடு அரசின் செயலரா? இல்லை, தவெக கட்சியின் செயலரா? என்று வினவினார். தற்போது, காவிரி நதிநீர் பிரச்சனை, மேகத்தாட்டு பிரச்சனை, விவசாயிகள் போரட்டம் என இருக்கும் சூழலில், இந்தப் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவிரி பிரச்சனையில் கார்நாடக காங்கிரஸ் அரகைக் காப்பாற்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *