Advertisements

அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சில், போர் நிறுத்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைத் தொடர்பாக புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், ஈரானை இனி ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது என்றும், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்கி, பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து, போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்குவதுடன், பொருளாதார தடைகளை நீக்கி, முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
மேலும், அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Advertisements




