Velankanni:மாதா பேராலய திருவிழா – கொடியேற்றத்துடன் துவங்கியது!

Advertisements

ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தரும் பேராலயம் வேளாங்கண்ணியில் உள்ளது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக இந்த பேராலயம் விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து ‘ஆவே மரியா’ என முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

திருவிழாவையொட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

விழா நாட்களில் தினமும் மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி பேராலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *