பட்டாசு விபத்து – அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Advertisements
பட்டாசு தொழிலாளர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் அமைச்சர் கீர்த்தனா என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்துகளில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு தனது திரைப்படப் பிரமோஷனுக்காக முதலமைச்சர் விஜய் பட்டாசு தொழிலாளர்களிடம் அமர்ந்து பேசிய புகைப்படத்தை வைத்து, “பட்டாசு தொழிலாளர்களின் நலன் விரும்பி” எனக்கூறும் அமைச்சர் கீர்த்தனா, சட்டமன்றத்தில் அரசியல் ஆதாயம் தேடி தனது சொந்தத் துறையை முற்றிலுமாகக் கோட்டைவிட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். தவெக ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் ரசிகர் மன்றத் தலைவர்கள் போல நடந்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழக அரசிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *