PM Modi: புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல்!

Advertisements

வாரணாசியில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் கட்டப்படும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…

ஆன்மீக தலமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போது அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தந்து ரூ.450 கோடி பட்ஜெட்டி கட்டப்படும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படவுள்ளது. கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது.

டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

இந்த நிலையில், தான் இன்று வாரணாசிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் புதிய ஜெர்சியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் கையொப்பமிட்ட பேட் ஒன்றை பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *